மன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விநியோகம் தடைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.