அனைத்து தனியார் பஸ்களிலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளினை கருத்திற்கொண்டு, பஸ்களில் பொதிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பயணிகளின் பொதிகளை பஸ்களின் பிற்பகுதிகளிலும் வைக்கமுடியாது. 

தம்மிடமுள்ள கைப் பைகளை மாத்திரம் பஸ் நடத்துனரின் கண் பார்வைக்கு எட்டும் வகையில் எடுத்துச்செல்ல முடியும். சந்தேக நபர்கள் பஸ்களில் பயணிப்பார்களாயின் இது தொடர்பில் பஸ் நடத்துனருக்கும் சாரதிக்கும் அறிவிக்கவேண்டும் என்றும் நாம் ஏற்கெனவே அறிவித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த விதிமுறைகளை பின்பற்றுவதன் நோக்கம், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி படுத்துவதுடன், பயணிகள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தன்மையை போக்குவதற்காகவேயாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.