நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தினையடுத்து இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இலங்கை முழுவதும் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியா பட்டக்காடு பகுதியில் அமைந்துள்ள முஸ்ஸிம் கிராமத்தில் இன்று (29) காலை 8.30மணி தொடக்கம்  சுமார் ஒரு மணிநேரம் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட பொலிஸாருடன் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

அப் பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்குள் பொலிஸாருடன் இராணுவத்தினர் இணைந்து சென்று அலுமாரி , கட்டில் பின்பகுதி , கூரையின் பகுதி, அனைத்து அறைகள் , வீட்டின் வெளிப்பகுதி போன்ற அனைத்தையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டை பதிவினையும் மேற்கொண்டனர்.

எனினும் இச் சோதனை நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.