மன்னார் நகரின் பல்வேறு இடங்களில் இன்று திங்கட்கிழமை (29) காலை 6 மணி முதல் முப்படையினரும் இணைந்து கடும் சோதனைகளையும்,தேடுதல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

உப்புக்குளம், நளவன் வாடி, பள்ளிமுனை, மூர்வீதி ஆகிய கிராமங்களில் இன்று திங்கட்கிழமை(29) காலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர், பொலிஸார், கடற்படையினர் இணைந்து வீதிகளை மறித்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அக்கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் வீட்டில் உள்ள உடமைகளை முழுமையாக சோதனைக்கு உற்படுத்தியுள்ளதோடு,வீட்டில் உள்ளவர்களின் விபரங்களையும் பரிசீலினை செய்துள்ளனர்.

மேலும் வீதியில் செல்லுபவர்களின் அடையாள அட்டை பரிசீலினை செய்யப்படுவதோடு,மோட்டார் சைக்கில் உள்ளிட்ட ஏனைய வாகனங்களும் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிமுனை- உப்புக்குளம் பிரதான வீதியில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் குறித்த கிராம மக்களின் இயல்பு நிலை  பாதிக்கப்பட்டுள்ளதுடன்.மேலும் மன்னாரில் பல்வேறு கிராமங்களில் சோதனைகளை மேற்கொள்ள படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.