கொல்கத்தாகவுக்கு சவால் விடுத்தா பாண்டியா, எனினும் வீணானது அவரின் போராட்டம்!

Published By: Vishnu

29 Apr, 2019 | 09:49 AM
image

ஹர்த்திக் பாண்டியாவின் வேகமான போராட்டம் வீணானதான் காரணமாக கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 34 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 47 ஆவது லீக் போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாகவில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி வீரர்களின் அடுத்தடுத்து அதிரடியான வான வேடிக்கை காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து அதிரடியாக 232 ஓட்டங்களை குவித்தது.

233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மும்பை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் 6.1 ஓவரில் 58 ஓட்டங்களுக்குள் வீழ்த்தபட்டது (டீகொக் டக்கவுட், ரோகித் சர்மா 12, லிவிஸ் 15, சூரியகுமார் யாதவ் 26).

எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்த பாண்டிய மைதானத்தில் தொடர்ந்தும் பட்டையைக் கிளப்ப மும்பை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிரித்தது.

மைதானத்தில் தொடர்ந்தும் அதிரடிகாட்டிய பாண்டியா 17 பந்துகள‍ை எதிர்கொண்டு 7 ஆறு ஓட்டம், 2 நான்கு ஓட்டம் அடங்களாக வேகமாக அரைசதம் அடித்தார். 

இத் தொடரில் குறைந்த பந்துகளில் வேகமாக அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையையும் இன்றைய தினம் பாண்டியா பெற்றுள்ளார்.

எனினும் இதன் பின்னர் 13.2 ஆவது ஓவரில் சுனில் நரேனுடைய பந்து வீச்சில் பொல்லார்ட் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, குருனல் பாண்டியா ஆடுகளம் நுழைந்தார்.

இருவரும் இணைந்து துடுப்பெடுத்தாடிவர மும்பை அணி 15 ஓவர்களின் நிறைவில் 140 ஓட்டங்களை பெற்றதுடன் 15.2 ஆவது ஓவரில் 150 ஓட்டங்களை கடந்தது.

ஒரு கட்டத்தில் மும்பை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 74 என்ற நிலையும் 18 பந்துகளில் 59 என்ற நிலையும் இருந்தது.

எனினும் 18 ஆவது ஓவரை எதிர்கொண்ட ஹர்த்திக் பாண்டியா அந்த ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்கள், ஒரு நான்கு ஓட்டம் என்பவற்றை விளாசித் தள்ளி அந்த ஓவரின் இறுதிப் பந்தில் மொத்தமாக 31 பந்துகளை எதிர்கொண்டு 9 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்களாக 91 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க குருநல் பாண்டியா 19.4 ஓவரில் 24 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து, 198 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 34 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

ஆடுகளத்தில் பேரிண்டர் ஸ்ரான் மூன்று ஓட்டத்துடனும், ராகுல் சாஹர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் ரஸல், சுனில் நரேன் மற்றும் ஹாரி கர்னி தலா 2 விக்கெட்டுக்களையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58