அமெரிக்கா புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ட்ரையோன் பீல்ட்ஸ் (21) என்ற இளைஞர் பாலியல் உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தற்செயலாக தனது காதலி கிறிஸ்டினா மேகரை (18) துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் ட்ரையோன் பீல்ட்ஸ் அமெரிக்க அவசரசேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்து தான் பெண்ணொருவரின் தலையில் சுட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் ஹோட்டல் அறையொன்றிலே இடம்பெற்றுள்ளது. உடனே அருகிலிருந்த வைத்தியசாலைக்கு கிறிஸ்டினா அழைத்துச் செல்லப்பட்டபோதிலும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிறிஸ்டினா தனது தலையில் வேடிக்கையாக துப்பாக்கியை வைக்குமாறு ட்ரையோன் பீல்ஸிடம் கூறியுள்ளார் எனவும் அதையடுத்து துப்பாக்கியை கையிலெடுத்த ட்ரையோன் அதன் மெகஸினை கழற்றி வைத்துளள்ளார் எனவும் ஆனால், துப்பாக்கியின் சேம்பர் பகுதிக்குள் தோட்டாவொன்று இருந்ததை தான் அவதானிக்கவில்லை எனவும் வேடிக்கையாக துப்பாக்கி விசையை அழுத்தியபோது அத்தோட்டா கிறிஸ்டினாவின் தலையை தாக்கியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் ட்ரையோன் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரு நாட்களுக்கு முன்னரே தானும் கிறிஸ்டினாவும் சந்தித்ததாக ட்ரையோன் பீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது ட்ரையோனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM