டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியடைந்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 46 ஆவது லீக் போட்டி ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ், விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடைய இன்று மாலை 4.00 மணியளவில் டெல்லியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணியிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.

188 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் பெங்களூரு அணி 16 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

பெங்களூரு அணி சார்பில் பார்தீவ் படேல் 39 ஓட்டத்துடனும் விராட் கோலி 23 ஓட்டத்துடனும், வில்லியர்ஸ் 13 ஓட்டத்துடனும், சிவம் டூப் 24 ஓட்டத்துடனும், கிலேசன் 3 ஓட்டத்துடனும் குர்கீரத் சிங் மன் 27 ஓட்டத்துடனும், வோசிங்டன் சுந்தர் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, ஆடுகளத்தில் ஸ்டோனிஸ் 32 ஓட்டத்துடனும், உமேஷ் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுக்களையும், இஷான் சர்மா, அக்ஸர் படேல் மற்றும் ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்