(நா.தினுஷா)

புர்கா ஆடை இஸ்லாமிய கலாசாரத்துக்கு உரித்தானதல்ல. அந்த ஆடையை நீக்குவதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம். ஆனால் புர்கா ஆடை பற்றி பேசி இந்த தொடர்குண்டுத் தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னணியாக இருந்த சம்பவங்களை அரசாங்கம் மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாம்மில் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதல் கிறிஸ்தவ மக்களை மாத்திரம் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல. ஒட்டுமொத்த இலங்கை வாழ் மக்களுக்கும் எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே கருதுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க் கட்சி அலுவலகத்தில் இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முஸலிம் இளைஞர் அணியினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அவர் இதனை தெரிவித்தார்.