(எம்.மனோசித்ரா)
இறைவனின் பெயரைக் கூறி ஒரு இனத்தை அழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது சரி என்று முன்வைக்கப்படும் கருத்துக்கள் மிகப் பிழையானதொன்றாகும். இவ்வாறு மதத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்தவாரம் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் கவலையடைக் கூடியவை என்று கொழும்பு பேராயர் கார்தினர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் குண்டு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற விஷேட ஆராதனையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேராயர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மனித உயிர்களை விட உயர்வான வேறொன்று இந்த உலகத்தில் கிடையாது. எம்மால் இந்த உலகத்தில் தனித்து வாழ முடியாது. எம்முடன் வாழ்வதற்கு ஏனையவர் நிச்சயமாக இருக்க வேண்டும். கடவுளின் பெயரில் ஒருவரை அழிக்க முடியாது.
இது மிகப் பிழையானதொரு விடயமாகும். அன்று எமது உறவுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் உண்மையில் கவலையடைக் கூடியவை. அவை முழு மனித குலத்திற்குமே இழைக்கப்பட்ட துரோகமும் அநீதியுமாகும். உலகில் பிறந்துள்ள ஒவ்வொரு மனிதர்கள் சமமானவர்களே.
எனவே பிரிதொருவருக்கு மரணத்தையோ, கவலையையோ யாராலும் கொடுக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM