தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரும் கொழும்பு, சங்கரில்லா ஹொட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டவருமான மொஹமட் சஹ்ரானின் சகோதரரான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் இப்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தெமட்டகொடை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்யும்போது அவரிடமிருந்து இரு வாள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.