(எம்.ஆர்.எம்.வஸீம்)

குற்றவாளிகளுக்கு ஆரம்பத்திலே தண்டனை வழங்கி இருந்தால் இவ்வாறான பாரிய அழிவு நாட்டில் ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளிகளை கண்டும் கணாமல்போல் இருந்தமையே இதற்கான காரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை போக்க தேசிய நல்லிணக்கம்போன்று மத நல்லிணக்கம் மிகவும் அத்தியாவசியமாகும். தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாமல் அதனை ஆலோசனை மற்றும் உபதேசங்கள் மூலம் தடுத்து நிறுத்த பேராயர் மல்கம் ரன்ஜித் ஆண்டகை செய்த பணி மிகவும் போற்றத்தக்கது. இல்லாவிட்டால் இன்று பாரியதொரு அழிவை நாடு எதிர்கொண்டிருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டர்.