ஒரு மனிதர் கடந்த 30 வருடங்களாக தன்னுடைய முதுகில் 85x65 செ.மீற்றர் அளவு புற்று நோய் கட்டியை சுமந்து வருகிறார்.

இவருக்கு வயது தற்போது 68 வயதாகின்றது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டியால் பாதிக்கப்பட்டு வருகிறார்.

இவருடைய முதுகில் உள்ள கட்டியின் எடை 14.9கிலோ எடை கொண்டது. இக்கட்டி இவருடைய முதுகு பகுதியில் அமைந்துள்ளது. இந்த கட்டியை அகற்றுவதற்கு பல வழிகளில் முயற்சித்து வந்துள்ளனர்.

எனினும்,கட்டியை அகற்றுவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை அறிந்த வைத்தியர்கள் இதற்கு இணங்க மறுத்தனர். இந்த கட்டி, இவருடைய நுரையீரல், முதுகுத் தண்டு, முக்கிய இரத்தக் குழாய்கள் போன்றவற்றில் பரவி உள்ளதாக ஆய்வறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.

அதிக இரத்த அழைப்பு இருந்தாலும், இந்த அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது. மரபணு நிலை மற்றும் நரம்பு நார்க்கட்டிக் காரணமாக இந்த கட்டி வளர்ச்சி பெற்றுள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதோடு, பலத்த சவாலுக்கு மத்தியிலேயே குறித்த கட்டி அகற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்த மருத்துவ சிகிச்சை தொடர்ந்து 33 மணி நேரம் நடைபெற்றது என்று ஆதாரப்பூர்வ தகவல் குறிப்பிடுகிறது. 100 பேர் கொண்ட மருத்துவ குழுவுடன் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.