(நா.தினுஷா)

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவங்களினால் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்த தானம் நிகழ்வு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாக தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Related image

கொழும்பு - 7 இல் அமைந்துள்ள தேசிய விளையாட்டு விஞ்ஞானத்துறை நிறுவனத்தில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை இரத்தம் தான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதன்போது தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார ஆகியோர் பங்கேற்க்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.