ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமையில், வதந்திகளை நம்பாது நாட்டின் அமைதியை நிலை நாட்ட பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பை வரவேற்பதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்புத்தரப்பினருக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள். 

இது குறித்து தாம்பொதுமக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.