உலகின் இரண்டாவது மிகப்பெரிய வைரம் ஆபிரிக்காவின் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான ஒகவாங்கோ வைர நிறுவனத்தால், 1,758 கேரட் மதிப்புள்ள அப்பெரிய நீல நிற வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட நீல நிற வைரங்களிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த வைரமாக இருக்கும் என ஒகவாங்கோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரகாசமான நீல வண்ணம் கொண்ட இந்த வைரக்கல், சுமார் ஒரு கோடி முதல் 3 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக உருவாகி இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற நீல நிற வைரக் கற்கள் மிகச் சில மட்டுமே சந்தைக்கு வந்துள்ளதாக ஒகவாங்கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.