கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

அதன்படி DAE - 4197 என்ற இலக்கத்தகடுடைய லொறியும்,  PH-3779 என்ற இலக்கத்தகடுடையுடைய வேன், 144-2644 என்ற இலக்கத்தகடுடையுடைய மோட்டார் சைக்கிள் US -3740 தகடுடையுடைய ஸ்கூடர் மோட்டர் சைக்கிளொன்றும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. 

இதேவேளை BYC - 2183, PVC -7783, VC - 4843 மற்றும்  BMD - 0596 ஆகிய மோட்டர் சைக்கிள்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும், இது தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைத்தால் பொலிஸ் நிலையங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.