உலகம் முழுவதும் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 26 மில்லியனாக இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிலையில் உங்களுடைய உணவு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்தினால், இதய செயலிழப்பை 40 சதவீதம் வரை குறைக்க முடியும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இதயத்திற்கு போதுமான இரத்தமும், ஒக்சிஜனும் கிடைக்காததால் இதய செயலிப்பு ஏற்படுகிறது. நாம்  பொரித்த மற்றும் வறுத்த உணவு வகைகளை சுவைக்காக உட்கொள்கின்றோம்.

அத்துடன் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், பக்கற்றுகளில் அடைத்து விற்கப்படும் உணவுவகைகளையும்,  துரித உணவு வகைகளையும், அதிக கலோரிகளை கொண்ட உணவுகளையும் உட்கொள்கின்றோம். இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு படிந்து, இரத்த ஓட்டத்தை தடை செய்து, இதயத்திற்கு இரத்தம் செல்லாமல் இதய செயலிழப்பு நிகழ்கிறது.

இந்நிலையில் தாவர வகை உணவுகளான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் மற்றும் கடல் உணவான மீன் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதை பழக்கப்படுத்தினால், இதய செயலிழப்பு 40 சதவிகிதம் வரை தடுக்கப்படுவதாக வைத்திய நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். எனவே உங்களது உணவு வகையில் காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், உங்கள் இதய செயலிழப்பு ஏற்படாது தற்காத்துக் கொள்ளலாம்.