பள்ளிவாசலில் இருந்து 50 கத்திகள், 2 கோடரிகள் மீட்பு ;ஒருவர் கைது

By Daya

27 Apr, 2019 | 03:35 PM
image

மஸ்கெலியா பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 50 கத்திகளும் 2 கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவின் தலையிலான பொலிஸார் மஸ்கெலியா பள்ளிவாசலை திடீர் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்து 50 கத்திகளும் 2 கைக்கோடரிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டடுள்ளார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் சவூதியைச் சேர்ந்த முஸ்லிம் நபருக்கு சொந்தமான தோட்ட விடுதியொன்றிலிருந்து வோக்கிடோக்கிகள் சிலவும் வேறு உபகரணங்களும் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right