இலங்கைக்கு உதவி வழங்கும் அமெரிக்கா !

Published By: Priyatharshan

27 Apr, 2019 | 01:28 PM
image

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து இலங்கைக்கு உதவி வழங்க அமெரிக்க முன்வந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதரகம் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுதினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களையடுத்து அதற்கான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் மீட்பு முயற்சிகளுக்கும் பரந்துபட்ட ஒத்துழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த உதவியை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் வெடிபொருட்களை கண்டறிதல், சம்பவ இடங்கள் பற்றிய விசாரணைகள் மற்றும் தடயவியல் பகுப்பாய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளில் அமெரிக்க அணிகள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பணியாற்றக் கொண்டிருக்கின்றனர்.

அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலங்கை அதிகாரிகளின் கோரிக்கையின் பேரிலும் அவர்களுடன் ஒருங்கிணைந்தும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பங்காண்மையானது குறுகிய பால அடிப்படையிலானதும் தற்காலிகமானதும் மற்றும் அண்மைய தாக்குதல் குறித்தும் அதேபோல் குற்றவாளிகளை நீதிக்கு முன்பாக கொண்டுவருவதற்கானதுமாகும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51