நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் தாங்கியுள்ளவர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி தெரிவித்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில்,நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பஸ் போக்குவரத்து சேவையினையும் கருத்தில் கொண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதிகளில் தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில்  தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை நோயாளர்களை பார்வையிடுவதற்கு நேரம் வழங்கப்பட்டது.

ஆனால் கடந்த 25 ஆம் திகதி முதல் தற்காலிகமாக அமுலுக்கு வரும் வகையில் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணி வரை நோயளர்களை பார்வையிட முடியும்.

மேலும் காலை மற்றும் மதியம் வழமை போன்று பார்வையிட முடியும்.

மாலை நேர ஏற்பாடானது தற்காலிக ஏற்பாடு எனவும், தூர இடங்களில் இருந்து வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும், போக்குவரத்து பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் மனிதாபிமான ஏற்பாடாகவே குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.ஒஸ்மன் டெனி மேலும் தெரிவித்துள்ளார்.