பிரபுதேவா நடித்த ‘தேவி 2’ படம் மே மாதம் 31ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏ எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த ‘தேவி ’என்ற ஹாரர் படம் 2016ஆம் ஆண்டு வெளியாகி, பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபுதேவா மறுபிரவேசம் செய்தார்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தேவி=2 என்ற பெயரில் ஏஎல் விஜய் இயக்கத்தில் தயாராகியிருக்கிறது. இதனை ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கிறார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுற்று, வெளியீட்டிற்காக காத்திருந்த இந்த படத்தை, அடுத்த மாதம் 31ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்தத் திகதியில் தான் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘என். ஜி. கே’ எனப்படும் நந்த கோபால குமாரன் என்ற திரைப்படமும் வெளியாகிறது.
இதனிடையே தேவி 2 படத்தில் பிரபுதேவாவுடன் தமன்னா, நந்திதா ஸ்வேதா, டிம்பிள் ஹயாத் ,கோவை சரளா, குரு சோமசுந்தரம், நாசர், சதீஷ் ,யோகி பாபு , அர்ஜெய், அரவிந்த் ஆகாஷ் , ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அயங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம்ட சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
சூர்யாவுடன் மோத தயாராகயிருக்கும் பிரபு தேவாவை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM