காஞ்சனா 3 வெற்றியை தொடர்ந்து ராகவா லோரன்ஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திற்கு ‘கால பைரவா’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

டிஜிற்றல் செல்லுலாயிடில் பேய் கதையை கொமடியாக கொடுத்து, பேய் பற்றிய பயத்தை முற்றாக அழித்து, ரசிகர்களை மகிழ்வித்தவர் நடிகரும், இயக்குனருமான ராகவா லோரன்ஸ். இவரது இயக்கத்தில் வெளியான காஞ்சனா =3 வசூலில் பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

அத்துடன் ஒரு திரைப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகி,வசூலில் வெற்றி பெறுவது இது தான் முதன்முறை என்பதால் திரையுலகில் ராகவா லோரன்ஸிற்கு கூடுதல் கௌரவம் கிடைத்திருக்கிறது.  இதன் காரணமாகத்தான் காஞ்சனா 3 படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தன்னுடைய தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பையும் ராகவா லோரன்ஸுக்கு வழங்கியிருக்கிறது.

ராகவா லோரன்ஸ் புதிய படத்திற்கு ‘காலபைரவா’ என்று பெயரிட்டிருக்கிறார். இந்த படத்தில்  இருபதடிக்கும் அதிகமான நீளமுடைய பாம்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றும்,  படம் முழுவதும் 3டியில் படமாக்கப்படவிருக்கிறது என்றும் தெரியவருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ராகவா லோரன்ஸ் காஞ்சனா=2 படத்தை ஹிந்தியில் இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.