மலிங்கவின் சிறப்பான பந்து வீச்சினால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 46 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இந் நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள‍ை குவித்தது.

இதையடுத்து 156 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென்னை அணி 17.4 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுக்களையும்  இழந்து 109  ஓட்டங்ளை மாத்திரம் பெற்று, 46 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

சென்னை அணியின் முரளி விஜய் 38 ஓட்டத்துடனும், வோட்சன் 8 ஓட்டத்துடனும் 8 ஓட்டத்துடனும், ரய்னா 2 ஓட்டத்துடனும், ராயுடு டக்கவுட் முறையிலும், கேதர் யாதவ் 6 ஓட்டத்துடனும், ஷோரி 5 ஓட்டத்துடனும், பிராவோ 20 ஓட்டத்துடனும், சஹார் டக்கவுட் முறையிலும், ஹர்பஜன் சிங் ஒரு ஓட்டத்துடனும், செண்டனர் 22 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, இம்ரான் தாகீர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுக்களையும், குருனல் பாண்டிய மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுக்களையும், பாண்டியா, ரோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்