சென்னை அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 155 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 44 ஆவது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இந் நிலையில் இப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் முதலில் துடுப்பெடுத்தடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்கள‍ை குவித்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் டீகொக் 15 ஓட்டங்களையும், லிவிஸ் 32 ஓட்டங்களையும், குருனல் பாண்டியா ஒரு ஓட்டத்துடனும் ரோகித் சர்மா அதிரடியா துடுப்பெடுத்தாடி 48 பந்துகளில் 3 ஆறு ஓட்டம் 6 நான்கு ஓட்டம் அடங்களாக 67 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன்,  ஆடுகளத்தில் ஹர்த்திக் பாண்டியா 23 ஓட்டத்துடனும் பொல்லார்ட் 13 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னை அணி சார்பில் மிட்செல் சாண்டனர் 2 விக்கெட்டுக்களையும், சாஹர் மற்றும் இம்ரான் தாகீர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

நன்றி ; ஐ.பி.எல். இணையத்தளம்