மறு அறிவித்தல் வரை ஊரடங்கு !

Published By: Priyatharshan

26 Apr, 2019 | 09:07 PM
image

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்  உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்று இரவு 10 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென படைத்தரப்பு சந்தேகிக்கின்றது.

தேடுதல் நடவடிக்கையின் போது பரஸ்பர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை சம்மாந்துறை சென்னல் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கொடிகள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14