நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மற்றும் பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களை நாட்டில் நிலவிவரும் அசாதாரண நிலைகாரணமாக, தேசிய பாதுகாப்புக் கருதி, எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி திறக்கத் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.