பாடசாலை சீருடைக்கான வவுச்சர் கால வரையறை மே மாதம் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பாடசாலை சீருடைக்கான வவுச்சர் காலவரை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை தான் மட்டுப்படுத்தபட்டிருந்தது.

பாடசாலை மாணவர்களுக்கான வவுச்சர் கொடுக்கப்பட இருந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுத்தாக்குதலினால் குறித்த வவுச்சருக்கான காலவரையரையை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.