இளைய தலைமுறையினர்  விருந்து என்று கூறி, வார விடுமுறை நாட்களில் மது அருந்துவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனை தினம்தோறும் பழக்கப் படுத்திக் கொள்கிறார்கள். இதனால் அவர்களின் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.

கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதை தான் ஃபேட்டி லிவர் என்று கூறுகிறோம். இவை வருவதற்கு மிக முக்கிய காரணம் மது பழக்கம். உடல் கொழுப்பை கல்லீரலால் முறையாக வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்த முடியாத நிலை ஏற்படும் போது தான் கல்லீரலில் உள்ள செல்களில் கொழுப்பு படிந்து இந்த நோய் உருவாகிறது. மது அருந்தினால் இவர்களின் கல்லீரலில் வளர்சிதை மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், செல்களில் கொழுப்பு படிவதை அனுமதிக்கிறது. அடுத்து நீரிழிவு நோய் இருந்தாலும், கல்லீரல் வீக்கம் ஏற்படும். சிலருக்கு மட்டும் இது பாரம்பரியத்தின் காரணமாக வரக்கூடும்.

இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு தொடக்க நிலையில் எந்த வித தொல்லைகளும் ஏற்படுவதில்லை. அதற்கான அறிகுறியும் தோன்றுவதில்லை. இதனால் பலர் அலட்சியமாக இருந்து விடுவார்கள். இதன் காரணமாகவே கல்லீரலில் உள்ள செல்கள் சிதைந்து, சுருங்கி லிவர் சிரோசிஸ் என்ற நோய் ஏற்படுவதற்கான ஏற்படக்கூடும். 

கல்லீரல் வீக்கத்தை தொடக்க நிலையில் கண்டறிந்தால் மருந்து, மாத்திரை மற்றும் மது பழக்கத்தை கைவிடுவது மூலமே அதனை கட்டுப்படுத்தலாம். அடுத்த நிலையில் இருந்தால் சத்திர சிகிச்சையின் மூலம் அதனை குணப்படுத்தலாம். அடிக்கவில்லை என்று அலட்சியமாக இருந்தால் கல்லீரல் கெட்டு மஞ்சகாமாலை உடலெங்கும் பரவி 36 மணி நேரத்தில் அபாய கட்டத்தை எட்ட கூடும். எனவே கல்லீரல் தொடர்பான தொந்தரவு, அறிகுறியும், ஏதேனும் ஒன்று தெரிந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.