நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் த. மா. க. இடம் பெற்றது.  இந்த கூட்டணி நடைபெறவிருக்கும் 4 தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

“கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்தியாவில் அனைவருக்கும் ஜனநாயக கடமையை ஆற்ற உரிமை உள்ளது. அதனைப் பறிக்க கூடாது. இது தொடர்பாக உரிய விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்.

ஒரே இடத்தில் பலரது பெயர்கள் விடுபட்டதும் எங்கள் கட்சி ஏற்கவில்லை. இதுபற்றியும் விசாரணை நடத்த வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகளே காரணம். தற்போது உள்ளாட்சி தேர்தலை ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் நடத்தலாம் என மாநில அரசு அறிவித்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் த. மா. க. தொடரும்.” என்றார்.