உயர் பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள, எதிர்­கா­லத்தில் ஏற்­படவுள்ள, பாது­காப்­பற்ற நிலைமை மற்றும் தேசிய பாது­காப்­புக்­கான அச்­சு­றுத்தல் உள்­ளிட்ட விட­யங்­களை  ஆராய்ந்து  பொலிஸ் திணைக்­க­ளத்தின் உயர் பத­விகள் பல­வற்றில் மாற்றம் செய்ய தேசிய பொலிஸ் ஆணைக் குழு நட­வ­டிக்கை எடுத்து நேற்றைய தினம் உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் 13 பேரை ஆணைக்­குழு இடமாற்றியது.

அதன்­படி புதிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை வடமேல் மற்றும் வட­மத்­திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக கட­மை­யாற்­றிய  அபே­சிறி குண­வர்­தன நியமிக்கப்பட்டார்.

மேல் மாகா­ணத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இருந்த  நந்­தன முன­சிங்க வடமேல் மற்றும் வட மத்­திய மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பாக இடமாற்றப்பட்டார்.

கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பத­வி­யிலும் மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. அதன்­படி கொழும்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க பொலிஸ் அபி­வி­ருத்தி பகு­திக்கு மாற்­றப்­பட்டு, கொழும்­புக்கு பொறுப்­பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த வீர­சூ­ரிய நியமிக்கப்பட்டார்.

அத்­துடன் மேல் மாகா­ணத்தின் வடக்­குக்கு பொறுப்­பாக இருந்த  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  தேச­பந்து தென்­னகோன் புத்­த­ளத்­துக்கு மாற்­றப்ப்ட்டு அந்த இடத்­துக்கு புத்­தளம் பிரதிப் பொலிஸ் மா அதி­ப­ராக இது­வரை இருந்த சம்­பிக்க சிறி­வர்­த­னவை நியமித்தது.

 நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­ராக இருந்த சந்­தன அத்­து­கோ­ரள திரு­கோ­ண­ம­லைக்கு மாற்­றப்­பட்டு திரு­மலை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் கே.கட்­டு­பிட்­டிய நீர்­கொ­ழும்­புக்கு பொறுப்­பாக நியமிக்கப்பட்டார்.

கொழும்பு வடக்கு பொலிஸ் அத்­தி­யட்சர் சஞ்­ஜீவ பண்­டார  சீத்­தா­வக்க பொலிஸ் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு கொழும்பு வடக்­குக்கு பொறுப்­பாக ஏ.எம்.யூ. சந்­தன நியமிக்கப்பட்டார்.

கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த பொலிஸ் அத்­தி­யட்சர் ஜே.ஏ.யூ.பி. ஜய­சிங்க எல்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு எல்­பிட்­டிய பொலிஸ் அத்­தி­யட்சர் தல்­துவ கொழும்பு மத்­திய பிரிவுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், களனி பொலிச் பிரிவுக்கு பொறுப்பாக  நியமித்தமையும் குறிப்பிடத்தக்கது. 

இந் நிலையிலேயே இவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.