ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மெய்’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘கனா ’படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பல படங்களில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை, மெய் , கருப்பர் நகரம், மகளிர் அணி, வானம் கொட்டட்டும் இதைத் தவிர்த்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படமும், விஜய்சேதுபதியுடன் ஒரு படமும் நடிக்கிறார். 

இவரது நடிப்பில் அறிமுக இயக்குனர் எஸ். ஏ. பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மெய் ’. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுடன் சார்லி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள், நாயகனாக புதுமுக நாயகன் நிக்கி சுந்தரம் அறிமுகமாகிறார்.

படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் பேசுகையில்,“ வைத்தியதுறையில் காணப்படும் ஊழல்களை மையப்படுத்தி கதையை உருவாக்கி உள்ளேன். சமூக விழிப்புணர்வுடன் இப்படத்தின் திரைக்கதையை தயார் செய்திருக்கிறேன்.” என்றார்.

குறித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டிருக்கிறார். நாளை இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.