தீவி­ர­வா­தத்தில் யார் ஈடு­பட்­டி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­ப­ட­ வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. அதே­போன்று எந்த அர­சியல்வாதியும் எந்த பிர­ஜையும் தன்­னு­டைய சுய­ந­லத்­துக்­காக யாரையும் காட்­டிக்­கொ­டுக்­கக்­கூ­டாது. 

இது ஜன­நா­யக ரீதி­யிலும் தவ­றான நட­வ­டிக்கை என்­ப­துடன்  மனி­தா­பி­மான செயலும் அல்ல. இஸ்­லாத்தின் பார்­வை­யிலும் முறை­யா­ன­தல்ல. இவற்றை முற்­றாக  அனை­வரும் தவிர்த்­து­கொள்­ள­வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

அத்­துடன் பயங்­க­ர­வா­தத்தில் ஈடு­பட்டு மர­ணித்­த­வர்­களின் உடல்­களை நாங்கள் பொறுப்­பேற்­க­மாட்டோம். இஸ்­லாத்­துக்கும் இவர்­க­ளுக்கும் சம்­பந்தம் இல்லை. கிறிஸ்­தவ மக்கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மையில் ஆல­யங்­களில் வழி­பா­டு­களில் ஈடு­ப­வ­தற்கு அச்­ச­மாக இருந்தால் அல்­லது பாது­காப்பு பிரிவு வழி­பாட்­டுக்கு செல்­ல­வேண்டாம் என்று தெரி­வித்தால் முஸ்லிம் சமூகம் என்­ற­வ­கையில் அவர்­க­ளுக்கு பாது­காப்பு வழங்க தயா­ராக இருக்­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

மேலும், நாட்டில் இடம்பெற்றுள்ள அமைதியற்ற சூழ்நிலையின் காரணமாக, பொது மக்­களின் பாது­காப்பு கரு­தியும் நாட்டின் பாது­காப்பு பிரி­வுக்கு ஆத­ர­வ­ளிக்கும் வகை­யிலும் முகத்தை மூடி ஆடை அணியும் எமது பெண்­க­ளிடம் ஒரு­கோ­ரிக்­கையை நாங்கள் விடுத்­தி­ருக்­கின்றோம். அதா­வது இந்த காலப்­ப­கு­தியில் நீங்கள் பொது இடங்­க­ளுக்கு செல்­வ­தாக இருந்தால் முகத்தை மூடிச்­செல்­ல­வேண்டாம் என்ற பணி­வான வேண்­டு­கோளை விடுத்­தி­ருக்­கின்றோம்.

மேலும், ஆடை ஒரு கலா­சாரம். அது ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய தனிப்­பட்ட உரிமை. நாங்கள் மதத்­த­லை­வர்கள் என்­ற­வ­கையில் நாங்கள் சொல்லி அவர்கள் புர்கா அணி­ய­வில்லை. அப்­படி அணி­வ­தாக  இருந்தால் அனைத்து முஸ்லிம் பெண்­களும் அணி­ய­வேண்டும். கறுப்பு நிறத்தில் அணி­வதும் நாங்கள் சொல்லி அல்ல. அவர்கள் விரும்­பி­யதன் பிர­காரம் விரும்­பிய நிறத்தில் அணி­கின்­றனர் எனவும் அவர் தெரிவித்தார்.