கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுத ஒழிப்பு நிகழ வேண்டும் - புட்டின்

Published By: Vishnu

26 Apr, 2019 | 01:05 PM
image

கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத ஒழிப்பு நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின், கிம்யொங் உன்னிடம் எடுத்துரைத்துள்ளார்.

வடகொரிய ஜனாதிபதி கிம் யொங் உன்னும் ரஷ்ய ஜனா­தி­பதி  விளா­டிமிர் புட்­டினும்  ரஷ்ய  துறை­முக நக­ரான  விளா­டி­வொஸ்­டொக்­கிற்கு அரு­கி­லுள்ள ரஸ்கி தீவில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இதன்போதே புட்டின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது அணு ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக கிம் ஜொங்-உன் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவித்த பிறகு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை 2 முறையும் அவர் சந்தித்துப் பேசினார்.

இந் நிலையிலேயே ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் கிம்யொங் உன்னுக்குமிடையில் முதல் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மேற்­படி சந்­திப்பின்போது  வடகொரிய அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வது தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான பேச்சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­ட­தாக வடகொரிய தலை­வரும் ரஷ்ய  ஜனா­தி­ப­தியும் தெரி­வித்­தனர்.

அவர்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை மேற்­கொண்ட சந்­திப்பின்போது  இரு நாட்டு உயர் மட்ட அதி­கா­ரி­க­ளுக்கும் மத்­தியில் அமர்ந்­தி­ருந்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினர்.

இதன்­போது  தற்­போ­துள்ள நிலை­மையில் முன்­னேற்­றத்தை எட்­டு­வது குறித்து கிம் யொங் உன்னும் தானும்  கருத்­துக்­க­ளைப் பரி­மாறிக்கொண்­ட­தாக ரஷ்ய ஜனா­தி­பதி தெரி­வித்துடன் தாம் அமை­தி­யான தீர்­வுக்­கான வழி­மு­றைகள் சம்­பந்­த­மா­க­ கலந்­து­ரை­யா­டி­ய­தாக கிம் யொங் உன் கூறினார்.

அணு ஆயுத திட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன்னுக்கு சர்வதேச பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவைப்படுவதாகவும், சர்வதேச கட்டமைப்புக்குள் இந்த உத்தரவாதங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது புட்டின் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17