(ஆர்.விதுஷா)

நவகமுவ - கொரதொட பகுதியில் மகனொருவர் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம்  நேற்று இரவு 7 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் ,பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ள நிலையிலேயே மகன் தந்தையை கூரிய ஆயுத்தால் தாக்கியுள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர் 61 வயதுடைய கடுவெல பகுதியை சேர்ந்த ரணவக ஆராச்சிகே சிறிமல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனையடுத்து ,சந்தேக நபரான உயிரிழந்தவரின் 26 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,சந்தேக நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.