புதிய பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய?

Published By: Vishnu

26 Apr, 2019 | 06:07 PM
image

புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

அரசியல் அமைப்பு சபை இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது. இதன்பொது பிரதம நீதியரசர்  நியமனம் மற்றும் புதிய கணக்காய்வு நாயகம் ஆகியோர் நியமனம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது  சட்ட மா அதிபர் ஜயந்த ஜெயசூரியவை புதிய பிரதம நீதியரசராக நியமிக்க  அரசியல் அமைப்பு சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முனனர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட நளின் பெரேரா அண்மையில் ஓய்வு பெற்றுள்ளதையடுத்து அந்த வெற்றிடத்துக்கு புதிய நீதியரசர் ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது.

எனினும் கடந்த புதுவருட தினத்தில் இருந்து  22 ஆம் திகதி வரையில் நீதிமன்ற விடுமுறை வழங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 28 ஆம் திகதி புதிய நீதியரசர் நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை அடுத்து நேற்றைய தினமே புதிய நீதியரசராக  ஜயந்த ஜயசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. 

அதேபோல் புதிய கணக்காளர் நாயகமாக இதற்கு முன்னர் மேலதிக கணக்காளராக செயற்பட்ட  சூலா விக்கிரமரத்னவை நியமிக்க அரசியலமைப்பு சபையில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.  இந்த நியமனங்கள் குறித்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை...

2024-02-24 08:52:35
news-image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த...

2024-02-24 07:36:47
news-image

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய...

2024-02-24 07:12:23
news-image

இன்றைய வானிலை 

2024-02-24 07:19:01
news-image

தடைகளை மீறி சிவசேனை மறவன்புலவு சச்சிதானந்தன்...

2024-02-24 07:21:28
news-image

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க...

2024-02-24 00:29:49
news-image

நாட்டின் தேசிய அடையாளம், சட்டத்தின் ஆட்சியை...

2024-02-23 22:05:26
news-image

பிரதான எதிரியான ஜனாதிபதி ரணிலை வீழ்த்த...

2024-02-23 22:07:18
news-image

துபாய் இரவு விடுதியில் மோதல்: 13...

2024-02-23 22:07:27
news-image

சீன நகரில் 100 வாகனங்கள் ஒன்றுடன்...

2024-02-23 21:44:19
news-image

குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர்...

2024-02-23 20:58:08
news-image

கட்டுநாயக்கவில் கைதான யாழ்ப்பாணம், வவுனியாவைச் சேர்ந்த...

2024-02-23 19:53:21