இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஐ.எஸ் ஐ.எ.ஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு உலக நாடுகள் பலவற்றில் அஞ்சலிகள் மற்றும் கட்டணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தற்கொலை தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பன குறிவைக்கப்பட்டு  இத்தாக்குல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில் இத்தாக்குதல்களை கண்டித்து உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகள் பல்வேறு வகையான கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் பிரான்ஸ் நாட்டின்  ஈபிள் டவரின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு அந்நாட்டில் இலங்கை தாக்குதலுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

தாக்குதலைக் கண்டித்து, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் அவுஸ்திரேலியர்கள் இணைந்து இன்றய தினம் மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை அமைதியான முறையில் மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டுபாய் நாட்டில் இருக்கும் உலகில் உயர்ந்த கட்டிடமான புர்ஜீ கலிபாவில் இலங்கை தேசிய கொடியை ஒளிர விட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்மார்க் பிரதமர் மற்றும் அந்நாட்டு மக்கள் இணைந்து தீ பந்தம் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்தோடு சென்னை பெசன் நகரில் மக்கள் ஒன்று கூடி  இலங்கையில் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை நியூரோக் சிட்டியிலுள்ள டைம்ஸ் சதுர்க்கத்தில் உலகில் பிரசித்தி பெற்ற பதாகையில் இலங்கையின் தேசியக்கொடி இலத்திரணியல் வடிவில் இலங்கையின் தேசியக் கொடி ஒளிரவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாம் மத்திய நிலையத்தில் இலங்கையின் தேசியக்கொடி ஒளிரவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ்வாறு மேலும் பல உலகநாடுகளில் இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தற்கொலை தாக்குதலுக்கு கண்டனங்களும், கவலைகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.

இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு உலகின் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமைகோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.