புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் 2020 ல் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதை ஒட்டி அந்நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் செய்யப்படுகிறது. 

வைத்தியசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் புகைப்பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் நாகசாகி பல்கலைக்கழகம் புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்களை பேராசிரியர் பணியில் அமர்த்த மாட்டோம் என அறிவித்துள்ளது. 

அதேநேரம் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் பணியில் சேருவதற்கு முன் புகைப்பழக்கத்தை நிறுத்திவிடுவதாக உறுதி அளித்தால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அப்பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.