தற்காலிக பிரதி பாதுகாப்பு செயலாளராக துசித்த வனிகசிங்க  நிமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாம கடிதத்தை ஜனாதிபதிக்கு  கையளித்ததை அடுத்து துசித்த வனிகசிங்க  பிரதி பாதுகாப்பு செயலாளராக நிமிக்கப்பட்டுள்ளார்.

தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன.

இந் நிலையில் பொலிஸ் மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் பதவி விலகுமாறு எழுந்த அழுத்தங்களினாலேயே பாதுகாப்புச் செயலாளராகவிருந்த ஹேமசிறி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.