முல்லேரியா பொலிஸ் பிரிவின் ரணபிம மாவத்தை வடக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு  07.45 மணி அளவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த நபர் 38 வயதுடைய வர்த்தகர்  என விசாரணைகளின் பின் தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.