நான்கு அமெரிக்கப் பிரஜைகள் உட்பட 359 அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமாக அமைந்த உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்கள்களையடுத்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்ன் பி.டெப்லிஸ் ஒற்றுமையுடன் செயற்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வேறுபட்ட மத நம்பிக்கைகளைக் கொண்ட மற்றும் இனங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் உறவுகளைக் கட்டியெழுப்புவதில் கடந்த சில வருடங்களில் இலங்கை கொண்டிருந்த முன்னேற்றத்தை சுட்டிக்காட்டியிருக்கும் அவர், தொடர்ந்தும் ஒற்றுமையுடன் இருக்குமாறும் இலங்கையர்களை வலியுறுத்தி கேட்டிருக்கிறார்.

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கமையவே இவை நடைபெறுகின்றன. தடயவியல் மற்றும் சம்பவங்கள் நடந்த இடங்கள் பற்றிய விசாரணைகளில் இந்த அணியினர் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 

இந்த பெருந்துயரத்தை அடுத்து இலங்கை சமூகத்தினர் ஒன்றுபட்டு செயற்படுவதில் நாம் உதவக்கூடிய வழிகளை தீர்மானிப்பது தொடர்பில் தூதரகம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.