12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரேன், சுப்மன் கில், நீடிஸ் ரானா, ரங்கு சிங், ரஸல், பியுஸ் சாவ்லா, பிரித்விராஜ், கே.சி.காரியப்ப மற்றும் ஹரிகுரானி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டீபன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியில் ரகானே, சஞ்சு சம்சன், பென் ஸ்டோக்ஸ், அஷ்டன் டர்னர், பின்னி, ரியன் பராக், ஸ்ரேயஸ் கேபால், ஜெப்ர ஆர்சர், உனாட்கட் மற்றும் குல்கரனி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.