பொலிஸாரால் வெளியிடப்பட்டு தேடப்பட்டு வரும் வாகனங்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த லொறியுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை நாயக்ககந்த பகுதியில் வைத்தே (WP VAE 4197) என்ற இலக்கமுடைய லொறி ஒன்றையே பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்தோடு கொட்டாஞ்சேனை பகுதியிலும் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட லொறி ஒள்றுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.