(செ.தேன்மொழி)

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற் கொண்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு அஸ்கிரிய பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலின் பின் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைமையிலே அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் இந்த கோரிக்கையினை இன்று வெளியிட்டுள்ளார்.

முப்பது வருடகால யுத்த நிறைவின் பின் நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இது வரையில் இந்த விடயம் குறித்த எந்தவிதமான முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்றே தோன்றுகின்றது.

அனுபவம் வாய்ந்த தலைவர்கள் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் செயற்படும் விதம் எம் மத்தியில் அவர்கள் குறித்து பெரும் மதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.