டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வான் ரூயனை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர்  ரயன் வான் ரூயனை  டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தி  விளக்கமறியலில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும்  பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விஷேட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்நிலையில்  நடிகர் ரயன் வான் ரூயனை மே மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.