பள்ளிவாசல்களை இலக்குவைத்துள்ள சஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதக் குழு

Published By: Digital Desk 4

25 Apr, 2019 | 04:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் பதிவாகியுள்ள குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக, தமது கொள்கைக்கு மாற்றான கொள்கைகளையுடைய  முஸ்லிம் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த அடிப்படைவாத கொள்கைக் கொண்ட, மொஹமட் காசிம் சஹ்ரான் தலைமையிலான ஒழுங்கமைக்கப்பட்ட பயங்கரவாத குழு  திட்டமிட்டுள்ளது என பொலிஸ் மா அதிபருக்கு,  தொடர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பிரதான சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன  அறிக்கைவிடுத்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள்  அவர்களது இலக்கில் உள்ளதாக தமக்கு மிக நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் பள்ளிவாசல்களின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தின் ஊடாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரியப்படுத்தியுள்ளார்.

 ஹுப்பு அல்லது அவ்லியா பள்ளிவாசல்கள் என்பது, முஸ்லிம் சமய பெரியார்களின் அடக்கஸ்தலங்கள் உள்ள பள்ளிவாசல்கள் என அதில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ள நிலையில்,  பிரபுக்களின் பாதுகாப்பை உருதி செய்யுமாறு கோரி பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி அக்கடிதத்தை பொலிஸ் உயரதிகாரிகளுக்கு நேற்று  அனுப்பி வைத்துள்ளார்.

 அத்துடன் அந்த தகவல்கள் பிரகாரம் விஷேட  பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க, அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளையும்  தெளிவுபடுத்தியுள்ளதாக பொலிஸ் தலமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை புனித ஜும்மா தினத்தன்று பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் ஒன்று கூடும் வேளையில் பாதுகாப்பு குறித்து கூடிய அவதானம்  செலுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை  வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57