நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலையினால் அட்டன் நகரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, இராணுவப் படையில் இருந்து தப்பியோடிய இராணுவ சிப்பாய் ஒருவரை அட்டன் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பம் இன்று காலை அட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யபட்ட இராணுவ சிப்பையை தடுப்புக் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.