தற்கொலை தாக்குதலில் பலியானோர்களுக்கு  யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் போது தேசியக் கொடி,  மாகாண கொடி மற்றும் மாநகர சபை கொடி என்பன அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு மூன்று நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.


அத்தோடு மொழுகுவர்த்தி கையில் ஏந்தியவாறு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள்,  ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.