நாட்டில், இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை, விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு,  தூதரகம் முடிவு செய்துள்ளது. 

கொழும்பில் கடந்த 21ம் திகதி, 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், 359 பேர் உயிரிழந்துடன், 400 ற்கும் மெற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் மரணமடைந்த,  இந்தியாவைச் சேர்ந்த எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார், கே.ஜி.ஹனுமந்த் ராயப்பா, கே.எம்.லட்சுமி நாராயணா, எம்.ரங்கப்பா, வி.துளசி ராம், எச்.மாரே கவுடா, எச்.புட்டராஜூ, ஆர்.லட்சுமண கவுடா ரமேஷ் ஆகிய 9 பேரின் பட்டியலை இந்திய தூதரகம் நேற்று 24ம் திகதி அறிவித்துள்ளது.

இவர்களின் உடல்கள், நான்கு விமானங்கள் மூலம் இந்தியாவின் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.