இந்தியாவில்  டிக் டொக் செயலி மீதான தடைய நிபந்தனையுடன் நீக்கி உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இருந்து ‘டிக் டொக்’ என்னும் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தியாவில் "இந்த செயலியை பயன்படுத்திய 400 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக் டொக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்." என்ற விவரங்களை வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் டிக்-டொக் செயலியை தடை செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் டிக்- டொக் செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பரக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு மனு கடந்த 22 ஆம் திகதி  விசாரணைக்கு வந்தது. அப்போது டிக் டொக் செயலி மீதான தடை குறித்து வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் விசாரித்து முடிவெடுக்க வேண்டும். தவறினால் தடை உத்தரவு நீக்கப்பட்டதாக கருதப்படும் என உத்தரவு உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குறித்த வழக்கு இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சில நிபந்தனைகளுடன் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை திருத்தங்களுடன் நீக்கி உத்தரவிட்டது.

அதன்படி, சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. சமூக சீர்கேட்டை உருவாக்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது. சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதிகள் டிக்டாக் நிறுவனத்திற்கு விதித்துள்ளது.

மேலும், நிபந்தனைகளை மீறினால் டிக்டாக் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.தவிர, ஆபாச வீடியோக்கள், சர்ச்சையான வீடியோக்கள் செயலியில் பதிவு செய்யப்பட்டால் அதை 15 நிமிடங்களுக்குள் டிக்டொக்கில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.