(இராஜதுரை ஹஷன்)

எமது  நாட்டில்   தற்போது  காணப்படுகின்ற   தீவிரவாத  செயற்பாடுகளை  இல்லாதொழிக்க   அரசாங்கம்  அமெரிக்காவின் உதவினை  நாடுவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை  ஏற்படுத்தும். அமெரிக்காவின் உதவியுடன்   உலகில் எந்த  நாடும் தீவிரவாதத்தை  வெற்றிக் கொள்ளவில்லை..   

முதலில்  எமது  நாட்டு   தேசிய பாதுகாப்பு  துறையினை  பலப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்  திலும் அமுனுகம தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று  வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்தைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெற்ற குண்டுதாக்குதலை தொடர்ந்து    அரசாங்கம் சர்வதேசத்திற்கு    நிபந்தனைகளற்ற அழைப்பினை  விடுத்துள்ளது.   நிலைமையினை   கட்டுப்படுத்தவும்,  தீவிரவாதத்தை இல்லாதொழிக்கவும்   அமெரிக்க இராணுவத்தின் உதவினை   நாடுவது  எதிர்காலத்தில்  பாரிய விளைவுகளை    ஏற்படுத்தும்,  அமெரிக்காவின்  உதவியுடன்  எந்த  நாடும் இதுவரையில் தீவிரவாதத்தை  வெற்றிக் கொள்ளவில்லை.    ஏமன், சிரியா,  ஈராக் , லிபியா,  ஆகிய  நாடுகளுக்கு  நிகழ்ந்தவை   இலங்கைக்கும் ஏற்படுமா  என்ற   சந்தேகம்  காணப்படுகின்றது.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள   புலனாய்வு  பிரிவினரது  உதவிகளை  தற்போது அரசாங்கம்   நாட்டுக்காக  பெற்றுக் கொள்ள வேண்டும்.  தேசிய பாதுகாப்பிற்காக    புலனாய்வு   பிரிவினருக்கு  பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று     மகாநாயக்கதேர்ர்கள்  வேண்டுகோள் விடுத்துள்ளமையினை   ஜனாதிபதி  கவனத்திற் கொள்ள வேண்டும் என்றார்.